பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா: பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள 101 உபகரணங்களின் 4-வது பட்டியலை பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்தார்
Posted On:
19 OCT 2022 11:06AM by PIB Chennai
குஜராத் மாநிலம் காந்தி நகரில் அக்டோபர் 19, 2022 அன்று நடைபெற்ற பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் தொடக்க நிகழ்ச்சியின் போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 101 உபகரணங்களின் 4-வது பட்டியலை பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்தார். பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைய இது மேலும் ஊக்கமளிக்கும்.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா என்ற நோக்கத்தை அடையவும் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கும் இந்தப் பட்டியல் ஊக்கமளிக்கும். அத்துடன் வருங்காலங்களில் ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும்.
இப்பட்டியல் குறித்த விவரங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் (www.mod.gov.in) இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1869080
**************
(Release ID: 1869296)
Visitor Counter : 216