சுரங்கங்கள் அமைச்சகம்
கனிம உற்பத்தி 4.2 சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Posted On:
19 OCT 2022 3:06PM by PIB Chennai
2022-23 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் கனிம உற்பத்தி முந்தைய ஆண்டின் இதேகாலகட்டத்தை விட 4.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சுரங்க அமைச்சகத்தின் இந்திய சுரங்கப் பணியகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆகஸ்ட் மாதத்திற்கான கனிம மற்றும் குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீடு 99.6-ஆக இருந்தது. 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3.9 சதவீதம் குறைவு.
ஆகஸ்ட் 2022-இல் முக்கிய தாதுக்களின் உற்பத்தி அளவு, நிலக்கரி 580 லட்சம் டன், லிக்னைட் 29 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2829 மில்லியன் கியூ.மீ., பெட்ரோலியம் (கச்சா) 24 லட்சம் டன், பாக்சைட் 1450 ஆயிரம் டன், குரோமைட் 146 ஆயிரம் டன், காப்பர் கன்க் 9 ஆயிரம் டன், தங்கம் 76 கிலோ, இரும்புத்தாது 158 லட்சம் டன், ஈயம் கன்க் 35 ஆயிரம் டன், மாங்கனீஸ் 169 ஆயிரம் டன், துத்தநாகம் 138 ஆயிரம் டன், சுண்ணாம்பு 320 லட்சம் டன், பாஸ்பரேட் 76 ஆயிரம் டன், மேக்னசைட் 10 ஆயிரம் டன், வைரம் 17 காரட்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1869177
**************
(Release ID: 1869294)
Visitor Counter : 146