சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 2 டிரில்லியன் ஏற்றுமதி இலக்கை எட்டும் : திரு பியூஷ் கோயல்

Posted On: 16 OCT 2022 5:10PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 2 டிரில்லியன் ஏற்றுமதி இலக்கை எட்டும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (16-10-2022) இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் இணைந்து நடத்திய ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், சிக்கல்கள் மற்றும் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்து வேகமாக முன்னேறும் வழிகள் குறித்து  விவாதிக்க வேண்டும் என்றார்.

இந்த அமர்வில் பல்வேறு ஏற்றுமதி துறைகளை உள்ளடக்கிய தமிழகத்தை சேர்ந்த ஏராளமான முன்னணி ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் இந்தியா பலப் புதிய மைல்கற்களை பதிவுசெய்தது. வணிகப் பொருட்கள் துறைகளில் அமெரிக்க டாலர் மதிப்பில் 422 பில்லியன் மற்றும் சரக்குகள், சேவைகள் ஏற்றுமதியில் அமெரிக்க டாலர் மதிப்பில் 254 பில்லியன் ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் 2021-22-யில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் ஏற்றுமதித் துறையின் பங்களிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாண்புமிகு பிரதமரின் கூற்றுப்படி, ஒரு நாட்டை வளரும் நிலையில் இருந்து வளர்ந்த நிலைக்கு மாற்றுவதில் ஏற்றுமதி முக்கியப் பங்காற்றுகிறது” என்றார்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது ஏற்றுமதியைத் உயர்த்த வேண்டும் என்று கூறிய திரு பியூஷ் கோயல்

உலகளாவிய தலையீடு இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்திய ஏற்றுமதிகள் 15 சதவீத  வளர்ச்சியை பெற்று இருப்பது சிறப்பானதாகும் என்றார்.

மத்திய அமைச்சர், வரும் 2047-ஆம் ஆண்டுக்குள், ஏற்றுமதியில் 25 சதவீத பங்கைக் கொண்டுநம் நாடு 30 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் என்று கூறினார். இந்த நிதியாண்டில் அதிக ஏற்றுமதி வளர்ச்சியை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

 

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஏ சக்திவேல் தனது வரவேற்பு உரையில், ரஷ்யாவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும்  பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன என்றும், அடுத்த 12 மாதங்களில் ரஷ்யாவிற்கு 8-10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கூடுதல் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் 15-20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஏற்றுமதி சரக்கு மீது சரக்குகள் மற்றும் சேவைகள்  வரியில் இருந்து விலக்கு அளிக்க மாண்புமிகு அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மேம்பாட்டு ஆணையர் டாக்டர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ், தமிழகம் மிகவும் வளர்ந்த தொழில்துறை உற்பத்தி சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது என்றும் ஆட்டோமொபைல், ஜவுளி, தோல், பொறியியல் போன்ற துறைகளின் உற்பத்தித்திறன் சிறப்பாக இருக்கிறது என்றார்.

**********

GS/SM/DHA


(Release ID: 1868305) Visitor Counter : 246


Read this release in: English