சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி புதிய சிறப்புச் சேவைகளைத் தொடங்குகிறது மற்றும் இரண்டு அரிய அறுவை சிகிச்சைகளை செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2022 6:09PM by PIB Chennai

சென்னை கே கே நகரில் உள்ள இஎஸ்ஐசி  மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடு செய்தவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்காக 550 படுக்கைகள் கொண்ட  முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் குறிப்பிட்ட அதிநவீன சிறப்பு  மருத்துவ சேவையை  வழங்குகிறது.

சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக, சென்னை கே கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான  அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, ஏற்கனவே உள்ள மருத்துவ புற்றுநோயியலுடன் வாதவியல் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை  ஆகிய  சேவைகளை அளிக்கிறது.

அண்மையில், மருத்துவமனையில் நுரையீரல் நோய் சம்பந்தப்பட்ட இரண்டு அரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 23 வயதான ஆண் மற்றும் 29 வாரத்தில் பிறந்த குறைப்பிரசவ குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சை ஆகியவை செய்யப்பட்டது.

இத்தகவலை மருத்துவமனை துணை இயக்குனர் திரு எஸ் கருப்புசாமி  தெரிவித்துள்ளார்.

*****

IR/RS/SM/IDS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1866550) வருகையாளர் எண்ணிக்கை : 293
இந்த வெளியீட்டை படிக்க: English