அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க், ஹீன்ஸ் வரலாற்று மையத்தில் “உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு-2022” நேற்று மாலை தொடங்கியது

Posted On: 22 SEP 2022 3:47PM by PIB Chennai

அமெரிக்க எரிசக்தி அமைச்சர் ஜெனிஃபர் கிரான்ஹோம் மற்றும் தூய்மை எரிசக்தி செயல் அமைப்பின் முக்கியமான அமைச்சர்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சந்தித்தது  “உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு 2022”-ன் முக்கியத்துவம் வாய்ந்த முதல் நாள் நிகழ்வாக அமைந்தது.

முன்னதாக அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க், ஹீன்ஸ் வரலாற்று மையத்தில் செயல் அமைப்பு 2022 நேற்று மாலை தொடங்கியது.

 இந்த மாநாட்டில் பங்கேற்கும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்களைச் சேர்ந்த இந்திய தூதுக்குழுவினருக்கு தலைமை தாங்கி டாக்டர் ஜிதேந்திர சிங் அமெரிக்கா சென்றுள்ளார். 30 நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் பீட்டர்ஸ்பர்கில் உள்ள டேவிட் எல் லாரன்ஸ் மையத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டிலும் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொள்கிறார்.

 உலகளாவிய முன்னணி விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் புதிய வம்சாவளியினர் கூட்டங்களில் பங்கேற்பதோடு நாளை தூய்மையான தொழில்நுட்பம் சம்பந்தமான தலைவர்களின் வட்டமேசை மாநாட்டிலும், அமெரிக்க எரிசக்தித்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பதை தாம் எதிர்நோக்கியிருப்பதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பருவநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி கண்ணோட்டத்தை உலகின் முன் வைப்பதற்கு உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு கூட்டம் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை அளித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1861492

**************


(Release ID: 1861543) Visitor Counter : 178


Read this release in: English , Urdu , Hindi