சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு, 2022
Posted On:
22 SEP 2022 4:58PM by PIB Chennai
1. ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு, 2022-க்கான அறிவிக்கையை 17.09.2022 அன்று பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சட்ட ரீதியிலான, சட்டபூர்வ ரீதியிலான அமைப்புகள், தீர்ப்பாயங்களில் குரூப்-பி மற்றும் குரூப் –சி காலிபணியிடங்களை நிரப்புவதற்காக வெளிப்படையான வகையில் போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது.
2. பணி விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, தேர்வுகட்டணம், தேர்வுமுறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள், பணியாளர் தேர்வு அறிவிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான https://ssc.nic.in/ என்ற முகவரில் ஆன்லைன் மூலம் மட்டுமே அளிக்கவேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 08.10.2022 (இரவு 11 மணி) இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 09.10.2022 (இரவு 11 மணி)
4. கணினி அடிப்படையிலான இத்தேர்வு தென் மண்டலத்தில் தமிழ்நாட்டில் எட்டு மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும் ஆந்திரபிரதேசத்தில் 10 மையங்களிலும், தெலங்கானாவில் மூன்று மையங்களிலும் என மொத்தம் 22 மையங்களில் டிசம்பர் 2022 ல் நடைபெறும்.
5. விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இந்த செய்திக்குறிப்பு வெளியிடப்படுவதாக பணியாளர் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர் திரு கே நாகராஜா தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1861513)
Visitor Counter : 174