சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
203.03 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
18 SEP 2022 9:10AM by PIB Chennai
நாடு முழுவதும் கொவிட்- 19 தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நாடு முழுவதும் கொவிட்- 19 தடுப்பூசி இயக்கம் 2021 ஜனவரி 16 அன்று தொடங்கியது. அனைவருக்கும் கொவிட்- 19 தடுப்பூசி என்ற புதிய கட்டம் 2021 ஜூன் 21 அன்று தொடங்கியது. கூடுதலான தடுப்பூசிகள் இருப்பு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக திட்டமிடுவதற்கு வசதியாக அவற்றால் நன்கு அறியப்படும் வகையில் தடுப்பூசி இருப்பு அறிதல்,
வழங்கல் தொடரை முறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தடுப்பூசி இயக்கம் கொண்டு விரைவுபடுத்தப்பட்டது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு அவற்றுக்கு கொவிட்- 19 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. அனைவருக்கும் கொவிட்- 19 தடுப்பூசி இயக்கம் என்ற புதிய கட்டத்திற்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 75% இலவசமாக வழங்கும்.
இதுவரை, 2022 செப்டம்பர் 18 நிலவரப்படி, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 203.03 கோடிக்கும் அதிகமான (2,03,03,52,325) கொவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 3. 70 கோடிக்கும் அதிகமான (3,70,12,740) கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீதமாகவும் பயன்படுத்தப்படாமலும் உள்ளன.
****
(रिलीज़ आईडी: 1860321)
आगंतुक पटल : 171