அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியாவின் முதலாவது "இரவு வான் சரணாலயம்" லடாக்கில் அமைக்கப்பட உள்ளது; இந்த உத்தேச இரவு வான் சரணாலயம் லடாக்கில் உள்ள ஹான்லேயில் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும்; இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 03 SEP 2022 2:09PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஒரு தனித்துவமான மற்றும் முதல்-வகையான முயற்சியாக, லடாக்கில் இந்தியாவின் முதல் "இரவு வான சரணாலயம்" அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது; இது அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும்.

உத்தேச இரவு வான் சரணாலயம், சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள ஹான்லேயில் அமைக்கப்படும். இது இந்தியாவில் வானியல்  சுற்றுலாவை அதிகரிக்கும். மேலும் இது ஆப்டிகல், இன்ஃப்ரா-ரெட் மற்றும் காமா-ரே தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும்.

தேசியத்  தலைநகரில் இன்று லடாக் பிரதேசத் துணைநிலை ஆளுநர்  ஆர்.கே. மாத்தூர் தம்மை சந்தித்தபின்  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ; புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ; பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ,இதைத் தெரிவித்தார்.

இரவு வான் சரணாலயம் தொடங்குவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக், தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் இந்திய வானியற்பியல் நிறுவனம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தலையீடுகள் மூலம் உள்ளூர் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்தத்  தளம் உதவும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன (சிஎல்ஆர்ஐ) விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு இந்த ஆண்டு இறுதிக்குள் லடாக் சென்று சிஎல்ஆர்ஐயின் பிராந்திய கிளையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தோல் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைக்கும்  விலங்குகளின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட பொருட்களின் உயிர்-பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த யூனியன் பிரதேசம்  மிகவும் அதிகமாகவும் பல்வேறு வகையிலும்  விலங்குகளைக்கொண்டுள்ளது.  லடாக்கில் உள்ள சார்தாங்கில் செம்மறி மற்றும் யாக் தவிர, முக்கியமாக பஷ்மினா ஆடுகள் 4 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன என்று அவர் கூறினார். புகழ்பெற்ற பஷ்மினா ஆடுகளின் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக லே - கார்கில் ஆகிய இடங்களில் தலா இரண்டு பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்ததற்காக சிஎஸ்ஐஆர்- ஐயும் அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856505

**************



(Release ID: 1856519) Visitor Counter : 652