மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

2026ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது – மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்

प्रविष्टि तिथि: 29 AUG 2022 7:28PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், ‘உலக மயமாக்கலில் இருந்து உள்ளூர் மயமாக்கல்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை சர்வதேச பொருளாதார உறவு குறித்த ஆராய்ச்சிக்கான இந்திய குழுமம் இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்புடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில், 2026ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்களை இந்தியா எப்படி உற்பத்தி செய்ய முடியும் என்பது குறித்தும் 120 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சந்திரசேகர், 2026ம் ஆண்டுக்குள்  300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார். இதற்காக நமது உள்நாட்டு உற்பத்தி சூழலை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.  சர்வதேச விநியோக அமைப்பில் நம்பத்தன்மை கொண்ட மற்றும் உண்மையான கூட்டாளியாக திகழ வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855316

 

***************


(रिलीज़ आईडी: 1855321) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी