சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலையை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நாளை வெளியிடுகிறார்

प्रविष्टि तिथि: 19 AUG 2022 2:16PM by PIB Chennai

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20-ஆம் தேதி (நாளை) திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.

 மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் திரு.தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு.ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அஞ்சல்தலையை வெளியிட்டு உரையாற்றுவார்.

அஞ்சல்தலையை பெற்றுக் கொண்டு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரையாற்றுவார்.

மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் திரு.எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.

மாமன்னர் ஒண்டி வீரன் தேசியப் பேரவை இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

                                                                                                                                   ****


(रिलीज़ आईडी: 1853120) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English