சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

வளாக வேலைவாய்ப்பு மூலம் ஒரு கல்வியாண்டில் மிக அதிக எண்ணிக்கையிலான பணி நியமனங்களைப் பெற்று ஐஐடி மெட்ராஸ் சாதனை படைத்துள்ளது

Posted On: 08 AUG 2022 2:12PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக, ஒரே கல்வியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பணிநியமனங்கள் கிடைக்கச் செய்துள்ளது.

2021-22ம் கல்வியாண்டில் இரண்டு கட்ட வளாக வேலைவாய்ப்புகள் மூலம் 380 நிறுவனங்களிடம் இருந்து 1,199 வேலைவாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன. கோடைக்கால உள்ளகப் பயிற்சியின் (Summer Internship) வாயிலாகக் கிடைத்த 231 முன்வேலைவாய்ப்புகளுடன் (PPOs) சேர்த்து மொத்தத்தில் 1,430 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 2018-19ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும்.

14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் இதில் அடங்கும். இந்த எண்ணிக்கையும் கூட சாதனை அளவாகும். தவிர, 131 புத்தாக்க நிறுவனங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட வளாக வேலைவாய்ப்பின்போது 199 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. நடப்பு சீசனில் 61 எம்.பி.ஏ. மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், ஐஐடி மெட்ராஸ்-ன் மேலாண்மைக் கல்வித்துறை 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ. 21.48 லட்சம் ஆகும். பெறப்பட்ட அதிகபட்ச சம்பளம் USD 250,000 ஆகும்.

2021-22ம் ஆண்டில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்தவர்களில் 80 விழுக்காடு மாணவர்கள், 2021-22ம் ஆண்டில் பணிபுரிவதற்கு நியமனங்களைப் பெற்றுள்ளனர்.

வளாக வேலைவாய்ப்புக்கான முக்கிய காரணிகளை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் ஆலோசகரும் (பணியமர்த்தல்) வெளியேறும் பேராசிரியருமான சி.எஸ்.சங்கர் ராம் கூறுகையில், "கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் மதிப்புக் கூட்டல் விளைவுகளை, அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள்தான் பிரதிபலிக்கின்றன. 2021-22ம் ஆண்டில் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

பேராசிரியர் சி.எஸ்.சங்கர் ராம் மேலும் கூறுகையில், "ஐஐடி மெட்ராஸ்-ல் மாணவர்களுக்கு அளிக்கப்படும் மிகக் சிறந்த பாடப்பயிற்சி, இணைப் பாடப்பயிற்சி வாய்ப்புகளுக்கு இது சான்றாக விளங்குகிறது. நடப்பு சீசனை வெற்றிகரமாக மாற்றிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், பணிநியமனங்கள் உள்ளிட்ட இதரப் பணிகளில் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என நம்புகிறேன். எங்கள் கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்புக் குழுவினருக்கும், இந்த முயற்சிகளுக்கு இடைவிடாத ஆதரவை நல்கிவரும் நிர்வாகத்திற்கும் எனது நன்றி" எனத் தெரிவித்தார்.

முதல்கட்டத்தில் மொத்தம் 45 சர்வதேசப் பணிநியமனங்கள் கிடைத்துள்ளன. இதில் 11 இடங்களை ரகுடேன் மொபைல் (Rakuten Mobile) நிறுவனம் வழங்கியுள்ளது. க்ளீன், மைக்ரான் டெக்னாலஜிஸ், ஹோண்டா ஆர்&டி., கொஹெஸ்டி, டா வின்சி டெரிவேட்டிவ்ஸ், அக்சென்டர் ஜப்பான், ஹிலாப்ஸ் இன்க்., க்வாண்ட்பாக்ஸ் ரிசர்ச், மீடியாடெக், மணி ஃபார்வர்டு, ரூபிக், டெர்ம்கிகரிட், ஊபர் போன்ற சர்வதேச நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.

 

துறை வாரியாக வேலைவாய்ப்பு விவரம் வருமாறு

துறைகள்

% பணி நியமனம்

தரவு அறிவியல் & பகுப்பாய்வு
 

17

அடிப்படைப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
 

42

நிதிச் சேவைகள்

6

தகவல் தொழில்நுட்பம் & மென்பொருள் தயாரிப்பு

17

மேலாண்மை

6

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
 

10

கல்வி

2


 

2021-22ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்கள்

வரிசை எண்

நிறுவனம்

வேலைவாய்ப்பு

1

எக்சல் சர்வீஸ்

28

2

ஓலா

27

3

இஒய் இந்தியா

23

4

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

22

5

மைக்ரோசாப்ட் இந்தியா பி.லிட்

19

6

இக்வியா

18

7

லார்சன் & டூப்ரோ

17

8

என்ஃபேஸ் எனர்ஜி

17

9

குவால்கம்

17

10

கோடக் மஹிந்திரா வங்கி

17

11

டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்

15

12

பஜாஜ் ஆட்டோ லிட்

15

13

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட்.

14

14

டெலாய்ட் இந்தியா

14

15

இண்டெல்

14

16

நைஜீரியா

13

17

வெல்ஸ் ஃபார்கோ இண்டர்நேஷனல் சொலுசன்ஸ் பி. லிட்.

13

18

கோல்ட்மேன் சாக்ஸ்& கோ எல்எல்சி

13

19

இண்டஸ் இன்சைட்ஸ் & அனாலிடிக்கல் சர்வீசஸ் பி.லிட்

12

20

ப்ளிப்கார்ட் இண்டர்நெட் பி.லிட்

12

 

###



(Release ID: 1849768) Visitor Counter : 142


Read this release in: English