பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிர் ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஷிலா தேவி லிக்மாபமிற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 01 AUG 2022 10:45PM by PIB Chennai

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிர் ஜூடோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுஷிலா தேவி லிக்மாபமிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

சுஷிலா தேவி லிக்மாபமின் அபாரமான செயல்திறனால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். பாராட்டுக்குரிய திறனையும், நெகிழ்தன்மையையும் அவர் வெளிப்படுத்தினார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

 

***


(Release ID: 1847184)



(Release ID: 1847229) Visitor Counter : 114