உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
116 நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 AUG 2022 4:48PM by PIB Chennai
இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் எந்தவொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் இந்தியாவிற்கோ அல்லது இந்தியாவிலிருந்தோ விமான சேவையை அளிக்க முடியும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக 116 வெளிநாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதே போல் இந்தியாவிலிருந்தும் அந்த வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை இயக்க முடியும்.
சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், கனடா, சீனா, சிரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847005
*****
(रिलीज़ आईडी: 1847085)
आगंतुक पटल : 320