சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கார்கில் வெற்றி தினம் சென்னை போர் நினைவுச்சின்னத்தில் நினைவுகூரப்பட்டது

Posted On: 26 JUL 2022 7:31PM by PIB Chennai

சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து 23-வது கார்கில் வெற்றி தினத்தை  இந்திய ராணுவத்தின் தென்னிந்திய தலைமையகம் நினைவுகூர்ந்தது. நாட்டுக்காக உச்சநிலை தியாகம் செய்து இன்னுயிர் ஈந்த வீரம் செறிந்த ராணுவ வீரர்களுக்கு தென்பிராந்திய தலைமைத் தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் ஏ அருண், ராணுவம், கப்பற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, மூத்த ராணுவ அதிகாரிகள், தேசிய மாணவர்படை மற்றும் பொது மக்கள் மரியாதை செலுத்தினர். 

 லடாக்கின் கார்கில் மாவட்ட வடக்குப்பகுதியில் உள்ள மலைச்சிகரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமித்த நிலைகளில் இருந்து அவர்களை விரட்டி 1999 கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் நாள் கார்கில் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆபரேஷன் விஜய் என்றும் அறியப்படுகின்ற கார்கில் போரில் இந்திய ராணுவ தளபதிகள் மற்றும் வீரர்களின் துணிவும், தியாகமும் ஒப்பற்றதாக விளங்குகிறது. 

###


(Release ID: 1845113) Visitor Counter : 179


Read this release in: English