நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி சுரங்கங்களின் ஏலம்
Posted On:
20 JUL 2022 4:04PM by PIB Chennai
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுதல் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாகும். பரிந்துரை செய்யப்பட்ட நடைமுறையின்படி, பரிந்துரைக்கப்பட்ட ஆணையம்/நிலக்கரி அமைச்சகத்தால், விண்ணப்பிப்பதற்கான அழைப்பு/டெண்டர் அறிவிப்பு வெளியாகும்போது நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் விண்ணப்பங்கள் இருப்பின், குறிப்பிட்ட விதிகளின்படி பரிசீலனை செய்யப்படும்.
2024-25-ம் நிதியாண்டுக்குள் 1 பில்லியன் டன் உற்பத்தி இலக்கை அடைய நிலக்கரி இந்தியா கழகம், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2022 வரை மேற்கொண்ட நடவடிக்கைகள்:
பசுமை வயல் மற்றும் விரிவாக்க திட்டங்கள் உட்பட 53 திட்ட அறிக்கைகள், நிலக்கரி உற்பத்தியில் கூடுதல் திறனை உருவாக்க, நிலக்கரி இந்தியா கழகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள், ஆண்டுக்கு 278 மில்லியன் டன் நிலக்கரியை கூடுதலாக உற்பத்தி செய்யும், 2024-25-ம் நிதியாண்டுக்குள் சுமார் 102 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
104.86 மில்லியன் டன் திறன் கொண்ட மொத்தம் 60 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
முதலாவதாக, 934.96 ஹெக்டேர் வனப்பகுதியை உள்ளடக்கிய 99 திட்டங்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இரண்டாவதாக, 2580.68 ஹெக்டேர் வனப்பகுதியை உள்ளடக்கிய 14 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6966.87 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843071
***************
(Release ID: 1843213)
Visitor Counter : 166