வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அம்ருத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் மறுசீரமைப்பில் 31 திட்டங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 18 JUL 2022 3:25PM by PIB Chennai

கடந்த ஐந்து ஆண்டுகளில் மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் (அம்ருத்) கீழ் ரூ.114.28 கோடி செலவில் நீர்நிலைகளை மறுசீரமைக்கும் 31 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 20 நீர்நிலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

2021 அக்டோபர் 1 அன்று அம்ருத் 2.0 தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.1,628.78 கோடி மதிப்பிலான 690 நீர்நிலைகள் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ. 277.69 கோடி மதிப்பிலான 279 திட்டங்கள் மாநில தண்ணீர் செயல் திட்டம் (ஸ்வாப்) 1-ன் கீழ் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் சமர்ப்பிக்கப்பட்டவை. ரூ.1,351.09 கோடி மதிப்பிலான எஞ்சிய 411 திட்டங்கள் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2022 ஜூலை மாதத்தில் சிறப்பு மாநில தண்ணீர் செயல் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அம்ருத் 2.0 திட்டத்தில் 4.7.2022 நிலவரப்படி,  தமிழ்நாட்டில் 187 நீர்நிலைகளை மறுசீரமைக்க 113.74 கோடியும்,  புதுச்சேரியில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்க ரூ.2.89 கோடியும் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வாப் 1 திட்டத்திற்கு ரூ.709.72 கோடியும், எஸ் ஸ்வாப் திட்டத்திற்கு ரூ.51.67 கோடியும் மத்திய உதவியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கவுஷல் கிஷோர்  கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842357

***************


(रिलीज़ आईडी: 1842382) आगंतुक पटल : 267