சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்

प्रविष्टि तिथि: 18 JUL 2022 3:11PM by PIB Chennai

மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் மத ரீதியாக அளிக்கப்பட்ட விவரங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று ஊழியர் நலன் மற்றும் பயிற்சி துறை மற்றும் பொது நிறுவனங்கள் துறை தகவல் தெரிவித்துள்ளன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை நிதிச்சேவை துறை அளித்துள்ளது.

அதன்படி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் புத்த மதம், கிறிஸ்துவம், ஜெயின், முஸ்லிம், பார்சி, ஜொராஸ்டியன் மற்றும் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்கியுள்ளது.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மாநிலங்களவையில் இத்தகவலை எழுத்துப்பூர்வமாக இன்று தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842350

***************  


(रिलीज़ आईडी: 1842367) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Gujarati