எரிசக்தி அமைச்சகம்
“முன்னோடி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப” மேம்பாடு தொடர்பாக தேசிய நீர்மின் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
15 JUL 2022 3:10PM by PIB Chennai
லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் உள்ள மின்துறையில் கார்பன் பயன்பாட்டை குறைப்பது என்ற நாட்டின் உறுதிப்பாட்டிற்கேற்ப, “முன்னோடி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப” மேம்பாடு தொடர்பாக தேசிய நீர்மின் கழகம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் திரு.ஆர்.கே.மாத்தூர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
லே மாவட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அங்குள்ள தேசிய நீர்மின் கழக விருந்தினர் இல்லத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய, ஹைட்ரஜன் உற்பத்தி உள்ளிட்ட ஹைட்ரஜன் செல் அடிப்படையிலான மைக்ரோ கிரிட் உருவாக்கப்படும். கார்கில் மாவட்டத்திற்கான ஒப்பந்தத்தின்படி, ஹைட்ரஜன் உற்பத்தியை வணிக ரீதியாக அதிகளவில் மேற்கொண்டு லடாக் பிராந்தியத்திற்கு தேவைப்படும் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841750
***************
(रिलीज़ आईडी: 1841786)
आगंतुक पटल : 301