சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

குரங்கு அம்மை அறிகுறிகள், பரவல், நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு உத்திகள்

Posted On: 15 JUL 2022 2:57PM by PIB Chennai

குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பாகும். இது வழக்கமாக  2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும்.  குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ அல்லது இல்லாதவர்களுக்கோ தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 பொதுவான அறிகுறிகள்

  • காய்ச்சல்
  • தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்)
  • நிணநீர் கணுக்கள் வீக்கம்
  • தலைவலி, தசைபிடிப்பு,
  • உடல் சோர்வு,
  • தொண்டை புண் மற்றும் இருமல்

பாதிப்புகள்:

·         கண் வலி அல்லது பார்வை மங்குதல்

·         மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம்,

·         உணர்வு மாற்றம், வலிப்பு

·         சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்

 அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்:

  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள  குழந்தைகள்
  • இணை நோய் பாதிப்புடையவர்கள்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
  • பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்,  ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்

நோய் பரவுதல்:

நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.

  • உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட), உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் மற்றும்
  • உடல் காயம் உடையவர்களுடன் மறைமுக தொடர்பு, அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறைபடிந்த உடைகள் மூலம் நேரடியாகவும், அறிய முடியாத பொருள்களிலிருந்து மறைமுகமாகவும் இது பரவக்கூடும்

தொற்று காலம்

சொறி ஏற்படுவதற்கு 1-2 நாட்களுக்கு முன்பு வரை அனைத்து சிரங்குகளும் விழும் / குறையும் வரை

பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • நீங்களோ / உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
  • நோய் வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்
  • நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்
  • தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்தியோ கழுவலாம்
  • நோயாளியை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்
  • அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு, நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய மருத்துவ முககவசத்தை பயன்படுத்துதல், நோயாளியின் தோலில் இருந்து உதிரக்கூடிய சொரியை தூய்மையான துணி கொண்டு மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

***************


(Release ID: 1841743) Visitor Counter : 11940