சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சிப்பெட் நிறுவனத்தில் பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUL 2022 11:50AM by PIB Chennai

மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால், சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தி வருகிறது.

 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், நுழைவுத் தேர்வு ஏதுமின்றி, நேரடி சேர்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டய படிப்பை (DPMT/DPT) படிக்கலாம்.

இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சியில் நேரடியாக சேரலாம்.

12-ம் வகுப்பு பயின்று உயர் கல்வியை பெற முடியாதவர்கள், 3 ஆண்டு கால பட்டயப்படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் 2-ம் ஆண்டில் நேரடியாக அனுமதி பெற்று படிப்பை முடிக்கலாம்.

நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந் தேதி  ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, 

தொலைபேசி எண்- 93600 98600 / 96002 54350

மின்னஞ்சல் முகவரி – Chennai@cipet.gov.in – ல் தொடர்பு கொள்ளுமாறு சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் மற்றும் தலைவர் திரு ஸ்ரீகாந்த் சிராலி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--------------


(வெளியீட்டு அடையாள எண்: 1841689) வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க: English