சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

விமானப் போக்குவரத்து திறனை அதிகப்படுத்த சென்னை விமான நிலையத்தில் நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுபாதை இன்று பயன்பாட்டுக்கு வந்தது

प्रविष्टि तिथि: 14 JUL 2022 6:14PM by PIB Chennai

விமானப் போக்குவரத்து திறனை அதிகப்படுத்த சென்னை விமான நிலையத்தில் நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுபாதை இன்று (ஜூலை 14, 2022) பயன்பாட்டுக்கு வந்தது

இதன் மூலம் விமானங்களின் பாதுகாப்பான, விரைவான இயக்கம் உறுதி செய்யப்படும். மேலும், தற்போதுள்ள முதன்மை ஓடுபாதையின் கையாளும் திறனும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.

சென்னை விமான நிலையத்தில் 90 சதவீத உள்நாட்டு, சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வரும் முதன்மை ஓடுபாதைக்கு இணையானதாக ப்ராவோ ஓடுபாதை உள்ளது.  ஏற்கனவே இந்த ஓடுபாதை வளைவாக இருந்ததால் முதன்மை ஓடுபாதைக்கு விமானங்கள் வருவதற்கு கூடுதல் நேரம் பிடித்ததோடு எரிபொருளும் அதிகமாக செலவானது. தற்போது ப்ராவோ ஓடுபாதை நேராக்கப்பட்டிருப்பதால் விமானங்களின் இயக்கங்கள் துரிதமாவது உறுதி செய்யப்பட்டு, அதிக போக்குவரத்துள்ள நேரங்களில் காலதாமதம்  தவிர்க்கப்படும். 

ப்ராவோ ஓடுபாதை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், வெளிச்செல்லும் விரைவு ஓடுபாதையின் 1 மற்றும் 2-க்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இது நிறைவடைந்த பின், மணிக்கு 36  விமான இயக்கங்கள் என்பது மணிக்கு 45-50 இயக்கங்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் கார்ப்பரேட் தொடர்பு / மக்கள் தொடர்பு மேலாளர் திரு எல் விஷ்ணுதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

   

****


(रिलीज़ आईडी: 1841528) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English