சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ரூ.41.83 லட்சம் மதிப்புள்ள 936 கிராம் எடையுள்ள 24 காரட் தூய தங்கம் பறிமுதல் – ஒரு பயணி கைது

Posted On: 13 JUL 2022 3:28PM by PIB Chennai

சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், துபாயிலிருந்து 12.07.2022 அன்று எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த திருச்சியைச் சேர்ந்த ராஜன் ரஜினி என்ற பயணியை வழிமறித்து சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.

     இந்த சோதனையின் போது, 936 கிராம் எடையுள்ள தங்கத்தை அவரது உடலில் மூன்று பொட்டலங்களாக மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

     24 காரட் தூய்மையான ரூ.41.83 லட்சம் மதிப்புள்ள இந்தத் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் திரு கே ஆர் உதய்பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

  

*******


(Release ID: 1841196) Visitor Counter : 147


Read this release in: English