சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
“இந்தியா 2047-க்கான தொலைநோக்கு” என்ற மையப் பொருளில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது
Posted On:
11 JUL 2022 2:59PM by PIB Chennai
“இந்தியா 2047-க்கான தொலைநோக்கு” என்ற மையப் பொருளில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது. இதற்கான கடிதத்தை அனுப்புவதற்கு 31.10.2022 கடைசி நாளாகும். ஆங்கிலம் / இந்தி / தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட கடிதங்கள் முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி, தமிழ்நாடு சரகம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கையெழுத்தில் உள்ள கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும். “01.01.2022 அன்று 18 வயதிற்கும் கீழே / மேலே இருக்கிறேன் என நான் சான்றளிக்கிறேன்” என்ற வடிவில் வயதை நிரூபிக்கும் சான்றிதழை பங்கேற்பாளர்கள் அளிக்க வேண்டும்.
வகைமைகள்:
18 வயது வரை
|
இன்லாண்ட் லெட்டர் வகைமையில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல்
|
உறையிலிட்டு அனுப்பும் வகைமையில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல்
|
18 வயதுக்கு மேல்
|
இன்லாண்ட் லெட்டர் வகைமையில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல்
|
உறையிலிட்டு அனுப்பும் வகைமையில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல்
|
சரக அளவில் ஒவ்வொரு வகைமைக்கும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை
பரிசு வகைமை
|
பரிசுத் தொகை
|
ஒவ்வொரு வகைமைக்கும் முதல் பரிசு
|
ரூ.25,000/- (ரூ.இருபத்தைந்தாயிரம் மட்டும்)
|
ஒவ்வொரு வகைமைக்கும் இரண்டாம் பரிசு
|
ரூ.10,000/- (ரூ.பத்தாயிரம் மட்டும்)
|
ஒவ்வொரு வகைமைக்கும் மூன்றாம் பரிசு
|
ரூ.5,000/- (ரூ.ஐந்தாயிரம் மட்டும்)
|
தேசிய அளவிலான ஒவ்வொரு வகைமைக்கும் வழங்கப்படும் பரிசு:
பரிசு வகைமை
|
பரிசுத் தொகை
|
ஒவ்வொரு வகைமைக்கும் முதல் பரிசு
|
ரூ.50,000/- (ரூ.ஐம்பதாயிரம் மட்டும்)
|
ஒவ்வொரு வகைமைக்கும் இரண்டாம் பரிசு
|
ரூ.25,000/- (ரூ.இருபத்தைந்தாயிரம் மட்டும்)
|
ஒவ்வொரு வகைமைக்கும் மூன்றாம் பரிசு
|
ரூ.10,000/- (ரூ.பத்தாயிரம் மட்டும்)
|
தேர்வு செய்யப்பட்ட கடிதங்கள் தவிர, வேறு எந்த கடிதப் போக்குவரத்தும் இருக்கக் கூடாது. இந்த கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலக தலைமை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1840741)
Visitor Counter : 3046