சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலைய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் மின்னேற்றி மையங்கள்

Posted On: 09 JUL 2022 2:13PM by PIB Chennai

சென்னை சர்வதேச விமான நிலைய 2-ம்கட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம், விமான நிலையம்  பெருமளவில் புதுப்பொலிவு பெற உள்ளதுஇத்திட்டத்தின் மூலம்விமான நிறுத்துமிடங்கள் அதிகரிக்கப்படுவதுடன், புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன

விமான நிலையத்தின் நகரத்தையொட்டிய பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிட (MLCP East & West) கட்டுமானப் பணிகளும் நிறைவடைய உள்ளதால், 01 ஆகஸ்ட் 2022 முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன.  2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன்பார்வையாளர்களுக்காக, சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் (5 எண்ணிக்கை) அமைக்கப்பட உள்ளது

பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் மின்சார வாகன நிலையம்

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் / பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி முனையங்கள் அமைக்கப்பட உள்ளனமேற்குப்புற வாகன நிறுத்துமிடத்தில் 3 மின்சார வாகன மின்னேற்றி முனையங்களும், கிழக்குப்புறத்தில் 2 மின்னேற்றி முனையங்களும் அமைக்கப்படுகிறதுமின்சார வாகனங்களுக்கான பிரத்யேக மின்னேற்றி நிலைய வசதி காரணமாக, வாகன நிறுத்துமிடம், வாகனச் சந்தையின்  மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், எதிர்கால தேவைகளுக்கேற்ப கூடுதல் மின்னேறி முனையங்களும் அமைக்கப்படும்.   வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தும் பார்வையாளர்கள் , அதற்கான பிரத்யேக செயலியில் உரிய கட்டணம் செலுத்திமின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி முனையங்களை முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்படுகிறது.  

பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் செயல்படத் தொடங்கியதும், தற்போது தரைத்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அழகுபடுத்தப்பட உள்ளது.    இதன் மூலம்சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நகர்ப்புற பகுதி அழகுற மிளிரும் என, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் சென்னை விமான நிலைய மக்கள் தொடர்வு மேலாளர் திரு.எல்.விஷ்ணுதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

                                                       

*******


(Release ID: 1840353)
Read this release in: English