சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

எர்ணாகுளம் பால்பண்ணையில் சூரிய சக்தி மின்உற்பத்தித் திட்டம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினார்

प्रविष्टि तिथि: 05 JUL 2022 7:18PM by PIB Chennai

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள எர்ணாகுளம் மண்டல கூட்டுறவு பால் உற்பத்தியாளர்  ஒன்றியத்தில் சூரிய சக்தி மின்உற்பத்தி பிரிவு செயல்படுத்தப்பட உள்ளது. மாடப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கலந்துகொண்டு, இரண்டு மெகாவாட் சூரியசக்தி மின்சார உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் மூலம் எர்ணாகுளம் பால்பண்ணை, நாட்டிலேயே முற்றிலும் சூரியசக்தி மூலம் இயங்கும் முதலாவது பால்பண்ணை என்ற பெருமையை பெறுகிறது.

கேரள மாநில சட்டம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பி ராஜீவ்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திருமதி ஜெ சிஞ்சுராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    

****


(रिलीज़ आईडी: 1839397) आगंतुक पटल : 195