நிதி அமைச்சகம்

பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை

Posted On: 30 JUN 2022 1:40PM by PIB Chennai

இந்திய அரசாங்கம், தேர்தல் பத்திர விற்பனைத் திட்டத்தை 2018 ஜனவரி 2-ம் தேதி, அறிவிப்பு எண் 20-ன் கீழ் அரசாணையின் மூலம் வெளியிட்டது. திட்ட விதிகளின்படி, இந்திய குடிமகன், இந்தியக் குடிமகனாக அறிவிக்கப்பட்ட ஒரு நபரோ அல்லது நிறுவப்பட்டவரோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தனிநபர் ஒருவர் தனித்தனியாகவோ அல்லது மற்ற நபர்களுடன் கூட்டாக இணைந்தோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951(1951-ல் 43) பிரிவு 29A-வின் கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற முடியும். இந்த கட்சிகள் சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.  சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கு தகுதியுடையவை. தகுதியான அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் மூலமே தேர்தல் பத்திரங்களைப் பணமாக மாற்ற இயலும்.

பாரத ஸ்டேட் வங்கி, அதன் 29 கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை விற்பதற்கும், பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838183

                               ***************



(Release ID: 1838199) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Marathi , Telugu