சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2021

प्रविष्टि तिथि: 25 JUN 2022 3:15PM by PIB Chennai

பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2021 (நிலை-1)- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கணினி வழியில் நடத்தவுள்ளது.

தென்பிராந்தியத்தில் 2,34,969 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும், ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 20 நகரங்களில் அமைந்துள்ள 23 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.

தென்பிராந்தியத்தில் 5.7.2022 முதல் 8.7.2022 வரையிலும், 11.7.2022 முதல் 15.7.2022 வரையிலும், 18.7.2022 முதல் 22.7.2022 வரையிலும் 14 நாட்கள் இத்தேர்வு நடைபெறும். தினந்தோறும் 3 ஷிப்டுகளாக, முதல் ஷிப்ட்- காலை 9.00 மணிமுதல், 10.30 மணி வரையிலும், 2-வது ஷிப்ட்- பிற்பகல் 1.00 மணி முதல் 2.30 மணி வரையிலும், 3-வது ஷிப்ட் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்களுக்கான  தேர்வுக்கூட மின்னணு அனுமதி சான்றிதழை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து, தேர்வு தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பாக இருந்து, தேர்வு முடிவடையும் நாள் வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னையில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

********


(रिलीज़ आईडी: 1836939) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English