வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2022 மே மாதத்தில் ஒட்டுமொத்த வணிக சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 24% அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2022 1:13PM by PIB Chennai
2022 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, (வணிக சரக்கு மற்றும் சேவைகள் சேர்ந்தது) 62.21 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தைவிட 24.03% அதிகமாகும். மே மாதத்தில் வணிக சரக்கு ஏற்றுமதி 38.94 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த மே மாதத்தில் இது 32.30 பில்லியன் டாலராக இருந்தது. இதன் வளர்ச்சி விகிதம் 20.55 சதவீதமாகும். சேவை ஏற்றுமதி மே மாதத்தில் 23.28 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்தைவிட (17.86 பில்லியன் டாலர்) 30.32% அதிகமாகும்.
ஏப்ரல்-மே 2022-ல், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிக சரக்கு மற்றும் சேவைகள் சேர்ந்தது) 124.59 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 25.90% வளர்ச்சியாகும். இதில் வணிக சரக்கு ஏற்றுமதி 78.72 பில்லியன் டாலர். சேவைகள் ஏற்றுமதி 45.87 பில்லியன் டாலர்.
மே 2022-ல் ஒட்டுமொத்த இறக்குமதி (வணிக சரக்கு மற்றும் சேவைகள் சேர்ந்தது) 77.65 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தைவிட 59.19% நேர்மறையான வளர்ச்சியாகும்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1834251)
வருகையாளர் எண்ணிக்கை : 336