சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022-க்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மறுப்பு
प्रविष्टि तिथि:
08 JUN 2022 1:39PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022-க்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 அடிப்படை ஆதாரமற்ற மற்றும் அறிவியல்பூர்வமற்ற முறையிலும், வெற்று யூகங்களின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குறியீடு, மிகக்குறைந்த கரியமில வாயு உமிழ்வு தொடர்பான வரலாற்று தரவுகளை மறைத்துள்ளது. விவசாயிகள் அதிகம் உள்ள வளரும் நாடுகளுக்கு, மண் ஆரோக்கியம், வேளாண் பல்லுயிர், உணவு இழப்பு மற்றும் கழிவுகள் உள்ளிட்டவை முக்கியமானவை. இவை புதிதாக வெளியிடப்பட்டுள்ள, சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 சேர்க்கப்படவில்லை.
மேற்கூறிய பல்வேறு காரணங்களால், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022-க்கு, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு பின்வரும் ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832058
***************
(रिलीज़ आईडी: 1832186)
आगंतुक पटल : 424