சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின்கீழ் (என்எஸ்எம்) ஒரு பகுதியாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சிராப்பள்ளி இடம்பெற்றுள்ளது

Posted On: 24 MAY 2022 6:15PM by PIB Chennai

இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின்கீழ் (என்எஸ்எம்) ஒரு
பகுதியாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சிராப்பள்ளி,
இடம்பெற்றுள்ளது . பரம் பொருள் (PARAM PORUL) எனப் பெயரிடப்பட்டுள்ள
இந்த மையத்தை, NIT திருச்சியின் நிர்வாகக் குழுவின் தலைவர் ஸ்ரீ பாஸ்கர்
பட், NIT திருச்சியின் இயக்குநர் Dr. G. அகிலா முன்னிலையில் திறந்து
வைத்தார். திருமதி சுனிதா வர்மா, குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ,
NSM, MeitY, Dr. நம்ரதா பாதக் , விஞ்ஞானி, DST, ஸ்ரீ E. மகேஷ், டைரக்டர்
ஜெனரல், CDAC, திரு. நவின் குமார், விஞ்ஞானி D, MeitY, திரு. S. A.
குமார், ஆலோசகர், MeitY , டாக்டர். நாகபூபதி மோகன், விஞ்ஞானி, DST,
டாக்டர். ஹேமந்த் தர்பாரி, மிஷன் இயக்குனர், NSM, ஸ்ரீ சஞ்சய் வந்தேகர்,
மூத்த இயக்குனர், CDAC, புனே, டாக்டர். நாகபூபதி மோகன், விஞ்ஞானி, DST,
ஸ்ரீ பிரசாத், CDAC, ஸ்ரீ முகமத் சஜித் CDAC,
ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். PARAM PORUL சூப்பர்
கம்ப்யூட்டர் மையம் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள அணைத்து NITகளில், NIT திருச்சிராப்பள்ளி மட்டுமே
NSMஇல், அமைக்க பெற்றது பெருமைக்குரிய அம்சமாகும். இது தவிர NSMஇல் 9
IIT கள் மற்றும் NABI இடம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில்
உயர் செயல்திறன் கணினி இயந்திரங்கள் அமைத்து, ஆராய்ச்சி மற்றும் அதிக
கணினி பயன்பாடு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு அளிப்பதே NSMன் முக்கிய
நோக்காகும்.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி, NSM - உள்கட்டமைப்பு
குழுவிடம் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், மின்னணுவியல் மற்றும்
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeITY) மற்றும் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம் துறை (DST) ஆகியவற்றால் ரூ.19 கோடி மதிப்பிலான சூப்பர்
கம்ப்யூட்டர் NIT திருச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

****



(Release ID: 1828016) Visitor Counter : 143


Read this release in: English