சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அரசு பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

Posted On: 20 MAY 2022 3:40PM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் ஆள் சேர்ப்பு நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள். பணியிடங்களுக்கான தகுதி, விதிமுறைகள், விண்ணப்பம் ஆகியவற்றை தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணைய தளத்திலும் தென் மண்டல அலுவலகத்தின் sscsr.gov.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.

பணியாளர் தேர்வாணையத்தின் சென்னையில் உள்ள தென் மண்டலத்தில் 31 வகைமைகளின் 318 பணியிடங்களை நிரப்புவதற்கான விவரங்கள் மேற்குறித்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன. 7 வகைமைகள் பட்டப்படிப்பு நிலையையும் 16 வகைமைகள் மேல்நிலைப்பள்ளி நிலையையும் 8 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையையும் கொண்டவை.

மகளிர் மற்றும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் படியான  இட ஒதுக்கீடும் உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வழியாக 13.06.2022 (இரவு 23.00 மணி வரை ) ஆணையத்தின் ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு தோராயமாக 2022 ஆகஸ்டில் நடைபெறக் கூடும் என்று பணியாளர் தேர்வாணைய தென் மண்டல துணை இயக்குனர் எம் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

****


(Release ID: 1826927)
Read this release in: English