சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஎஸ்என்எல் சென்னை வட்ட தலைமை பொது மேலாளராக திருமதி டி. பூங்கொடி நியமனம்
Posted On:
02 MAY 2022 4:45PM by PIB Chennai
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) திருமதி. T. பூங்கொடி ITS அவர்களை BSNL சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளராக நியமித்துள்ளது. அவர் இந்திய அரசின் இந்திய தொலைத்தொடர்பு சேவையின் 1987-ம் வருட தொகுப்பை சேர்ந்தவர் ஆவார். BSNL சென்னை தொலைபேசி வட்டமானது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் வரம்பைக் கொண்டுள்ளது.
டாக்டர் வி.கே. சஞ்சீவி ITS அவர்களின் பணி ஓய்வை தொடர்ந்து, திருமதி. T. பூங்கொடி ITS அவர்கள், BSNL சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளராக 01 மே 2022 முதல் பொறுப்பேற்றுள்ளார். திருமதி. T. பூங்கொடி ITS அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கம்யூனிகேஷன் இன்ஜினியர் பட்டம் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் MBA தொழில்நுட்ப மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். இதற்கு முன்பு திருமதி. T. பூங்கொடி ITS அவர்கள், தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் முதன்மை பொது மேலாளராக பணியாற்றியுள்ளார். அவர் DOT இல் ADET ஆக தனது பணியை துவங்கி, டிரான்ஸ்மிஷனில் நிபுணத்துவ பயிற்சி பெற்றார் மற்றும் தனது 35 வருட சேவையில் தமிழ்நாடு, ஹைதராபாத், ஷில்லாங், கவுகாத்தி ஆகிய இடங்களில் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அவர் ஏற்கனவே சென்னை தொலைபேசியில் சுமார் 12 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார், மேலும் சென்னை தொலைபேசியை செவ்வென வழிநடத்தவும், அதன் கீழ் உள்ள BSNL வாடிக்கையாளர்களுக்கும் திறம்பட சேவை புரியவும் அனுபவம் பெற்றவர் ஆவார்.
****
(Release ID: 1822022)
Visitor Counter : 192