பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் மற்றும் பிரேசில் சுரங்க மற்றும் எரிசக்தி அமைச்சர் இடையேயான சந்திப்பு பற்றிய கூட்டறிக்கை

Posted On: 21 APR 2022 4:48PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரியின் அழைப்பின் பேரில் பிரேசில் சுரங்கங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு பென்டோ அல்புகெர்க் ஏப்ரல் 19 முதல் 22, 2022 வரை இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். உயிரி எரிபொருள் மற்றும் வாகனத் தொழில்களின் தனியார் துறைத் தலைவர்கள் குழுவும் அமைச்சர் அல்புகெர்க் உடன் இந்தியா வந்துள்ளது.

எரிசக்தி துறையில் முழு அளவிலான இருதரப்பு ஒத்துழைப்பை தலைவர்கள் மதிப்பாய்வு செய்ததோடு நாடுகளுக்கு இடையே நன்மை பயக்கும் கூட்டாண்மையை மேம்படுத்த உறுதிபூண்டனர், மேலும், இந்த சூழலில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு இருதரப்பு யுக்தி சார்ந்த கூட்டை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரேசிலிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்திய நிறுவனங்களால் செய்யப்பட்ட வலுவான முதலீட்டின் முக்கியத்துவத்தை இரு தரப்பும் அங்கீகரித்துள்ளன. மேலும், இருதரப்பு முதலீடுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஏற்கனவே உள்ள முதலீடுகளைப் பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

எண்ணெய் மற்றும் அதன் துணை தயாரிப்புகளில் இருதரப்பு வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை இரு தரப்பும் எடுத்துரைத்ததுடன், பரஸ்பர நன்மை பயக்கும் இந்த வர்த்தகத்தை விரிவுபடுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. நீண்ட கால சிறப்பு ஒப்பந்தங்களின் கீழ் கச்சா எண்ணெயை பெறுவதற்கு இந்திய தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

குறைந்த கரிம (கார்பன்) எதிர்காலத்திற்கான உலகளாவிய மாற்றத்தின் முக்கிய பகுதியாக, நிலையான உயிரி ஆற்றல் மற்றும் உயிரி எரிபொருட்களின் சர்வதேச உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அளவிடுவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான மகத்தான சாத்தியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தச் சூழலில், உயிரி எரிசக்தியில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்காக, உயிரி ஆற்றல் மற்றும் உயிரி எரிபொருளுக்கான இந்திய-பிரேசில் கூட்டணியை உருவாக்குவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இருதரப்பு மற்றும் சர்வதேச செயல்பாடுகள் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் உயிரி எரிபொருள் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளின் நீண்ட பட்டியலை இரு அமைச்சர்களும் மதிப்பாய்வு செய்தனர். தொழில்நுட்ப பரிமாற்றம், பிரேசில்-இந்தியா எத்தனால் பேச்சுவார்த்தையின் இரு பதிப்புகள், விமான உயிரி எரிபொருள் பற்றிய கருத்தரங்கம், உயிரி எரிசக்தி ஒத்துழைப்புக்கான கூட்டுப் பணிக்குழு, வாகன உற்பத்தி துறையில் உயிரி எரிபொருளில் இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பு பற்றிய வட்டமேசை போன்றவை இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818727   

-----


(Release ID: 1818794) Visitor Counter : 306


Read this release in: Urdu , English , Hindi