நிலக்கரி அமைச்சகம்

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவிற்கான நிலக்கரி வழங்கல் கணிசமாக அதிகரித்துள்ளது

Posted On: 17 APR 2022 12:59PM by PIB Chennai

இந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திற்கான நிலக்கரி  விநியோகம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றிற்கு பதிலளித்துள்ள அந்த அமைச்சகம், தற்போதய நிலக்கரி தேவையை அம்மாநிலம் பூர்த்தி செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு (TPP) 2021-22-ம் நிதியாண்டில் 70.77 மில்லியன் டன் (MT) நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான  நிலக்கரி வினியிடம் அதிகரிக்கப்பட்டு வருவதாக நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது. நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள  புள்ளிவிவரங்களின்படி, கடந்த மார்ச் 2022-ம் ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  மின் உற்பத்தி நிலையங்களுக்கு நாளொன்றுக்கு  2.14 லட்சம் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், இது இந்த மாதம், அதாவது,ஏப்ரல் 11.04.2022-ம் தேதி  வரை நாளொன்றுக்கு 2.76 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாஜென்கோ நிறுவனத்திற்கு கடந்த 2021-22-ம் ஆண்டில் 37.131 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்  மகாஜென்கோவிற்கு தினசரி நிலக்கரி விநியோகம் 0.96 லட்சம் டன்னாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் நாளொன்றுக்கு  1.32 லட்சம் டன்னாக (11.04.22 வரை) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நிலக்கரிக்கான நிலுவைத் தொகை 2390 கோடி ரூபாயாக இருந்த போதிலும், மகாகென்கோவின் நிலக்கரித் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817528

****



(Release ID: 1817537) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Marathi , Hindi