தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இந்தியாவின் துடிப்புமிக்க ஸ்டார்ட்-அப் சூழலியல் நாட்டின் தொழில் முனைவு திறனுக்கு சான்றாக உள்ளது: மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்

Posted On: 13 APR 2022 5:06PM by PIB Chennai

அழகு சாதன பொருட்களை டிஜிட்டல் முறையில் விற்பனை செய்வதில் புதுமையை புகுத்தி வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்கிய நைக்காவின் நிறுவனர் திருமிகு ஃபல்குனி நயாருக்கு ஈ ஒய் தொழில் முனைவோர் விருது 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் செவ்வாய் இரவு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, 2022 ஜூன் மாதம் நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவோர் விருது நிகழ்ச்சியில் இந்தியாவை திருமிகு நயார் பிரதிநிதித்துவப்படுத்துவார். இந்தியாவின் துடிப்புமிக்க ஸ்டார்ட்-அப் சூழலியல் நாட்டின் தொழில் முனைவு திறனுக்கு சான்றாக உள்ளது என்று திரு புபேந்தர் யாதவ் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.

"இந்த வருட ஈ ஒய் விருதுகளின் இறுதி சுற்றில் ரூபாய் 1.87 லட்சம் மதிப்பிலான வருவாய் கொண்ட, 2.6 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு பணி வழங்கியுள்ள இருபத்தி ஒரு போட்டியாளர்கள் இருந்தார்கள் என்பதை அழியும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதற்கான அரசின் முன்முயற்சிகள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு உலக அளவில் இத்துறையில் இந்தியாவை மூன்றாவது இடத்திற்கு இளைஞர்கள் கொண்டு சென்றுள்ளனர்," என்று அவர் கூறினார்.

94 யுனிகார்ன் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து செயல்படுவதாகவும் இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் கூறிய திரு யாதவ், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு இடையிலும் இந்திய தொழில் முனைவோர் தொடர்ந்து உறுதியை வெளிப்படுத்தி  வெற்றியைக் கண்டுள்ளனர் என்றார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ரூ 6000 கோடி மதிப்பிலான ராம்ப் எனும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816441

***************



(Release ID: 1816555) Visitor Counter : 132


Read this release in: Urdu , English , Hindi