குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 13 APR 2022 5:52PM by PIB Chennai

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

குடியரசு துணைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி வருமாறு;

‘மகாவீர் ஜெயந்தி‘ நன்னாளில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

பண்டைக்கால இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீக குருக்களில் ஒருவரான பகவான் மகாவீர், உண்மை, கருணை மற்றும் அஹிம்சையை காவியமாக்கியவர்.  அவரது போதனைகள் மற்றும் எளிமையான வாழ்க்கை முறை மூலம் மக்கள் இரக்க மனம் கொண்டவர்களாக இருக்கும்படி ஈர்த்ததுடன், தார்மீக மற்றும் கொள்கை ரீதியான வாழ்க்கையை வாழ்ந்தவராவார்.  ‘அனேகந்தவாட்’ என்ற அவரது தத்துவம் நமது நாகரீக பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது.

இந்த நன்னாளில், மகாவீர் ஸ்வாமியின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நினைவுகூருவதுடன் அமைதியான இணக்கமான மற்றும் சமுதாயத்திற்காக பாடுபடுவதை நினைவுகூருவோம்.

**************


(Release ID: 1816551)
Read this release in: English , Urdu , Hindi