சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N. ரவி தமிழ்நாட்டில் சக்ஷம் 2022 பிரசார நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
11 APR 2022 3:55PM by PIB Chennai
சக்ஷம் 2022 - என்னும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு பரப்புரையை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N. ரவி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் & மாநில தலைவர் மற்றும் தென் மண்டல எண்ணெய் துறையின் தமிழ்நாடு & புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P. ஜெயதேவன் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) திரு. K. சைலேந்த்ரா முன்னிலையிலும் தென் மண்டல PCRAன் தலைமை மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. சந்தோஷ் குமார், BPCL-ன் தென் மண்டல (ரீடெய்ல்) தலைவர் திரு. புஷ்ப் குமார் நாயர், HPCL-ன் தென் மண்டல தலைவர் திரு. சஞ்சய் மாத்தூர், GAIL நிறுவனத்தின் மண்டல பொது மேலாளர் திரு. ராஜீவ் லோச்சன் பால் ஆகியோரின் முன்னிலையிலும் தொடங்கி வைத்தார்கள். இந்த எண்ணெய் சிக்கன பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பரப்புரை நாடெங்கிலும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 22, 2022 வரை, "பசுமை மற்றும் தூய்மை ஆற்றல் வாயிலாக இந்திய விடுதலையின் அமுதப் பெருவிழா" என்னும் கருப்பொருளில் மேற்கொள்ளப்படும்.
வரவேற்புரை ஆற்றிய திரு. P. ஜெயதேவன் தமது உரையில் தமிழ்நாடு & புதுச்சேரியில் இந்தியன்ஆயில் உள்ளிட்ட எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ளும் சக்ஷம் முன்முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சக்ஷம் 2022 என்பதன் கீழ், மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து திரு. A.M. சந்தோஷ் குமார், (CRC-PCRA,) பார்வையாளர்களுக்கு விளக்கினார்.
சென்னையில், சக்ஷம் 2022 விழிப்புணர்வு பரப்புரையைத் தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள், தமது சிறப்புரையில் கூறியதாவது : "நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு நாம் ஆரோக்கிய சுற்றுச்சூழலையும் சீரான எதிர்காலத்தையும் தர வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் இந்த எரிபொருள் சிக்கன நோக்கம் நிறைவேற தங்கள் பங்களிப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சக்ஷம் என்பது நம் வாழ்வியல் வழிமுறையாகி நம் பண்பாட்டில் கலந்து இருத்தல் வேண்டும். அப்போது தான் இந்த உலகம் மகிழ்ச்சியாகவும் பசுமையாகவும் திகழும்"
மாண்புமிகு ஆளுநர் அவர்கள், விழா மையத்தில், சக்ஷம் கருப்பொருளிலான, பள்ளி மாணவ மாணவிகள் தீட்டிய ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். இந்த மையத்தில், சக்ஷம் 2022 பரப்புரை வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம், எரிபொருள் சிக்கன பயன்பாடு பற்றிய செய்திகளுடன் தமிழ்நாடு & புதுச்சேரியில் பயணம் செய்யும்.
இந்த கருப்பொருள் பற்றிய விழிப்புணர்வில் மாணவ மாணவிகளை ஈடுபடுத்தும் நோக்கில் நிகழ்ச்சி மையத்தில் விநாடி வினா நடத்தப்பட்டது. எண்ணெய்/எரிவாயு சிக்கன பயன்பாடு குறித்து அவர்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் வினாக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அவர்களை ஊக்குவிக்கும் வகையில், கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவமணிகளுக்கு அங்கேயே பரிசுகள் வழங்கப்பட்டன. கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் இந்த மாபெரும் விழிப்புணர்வு பரப்புரையில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அவையாவன :
பொது மக்களுடன் கலந்துரையாடல் & விவாத அரங்கம்
ஆட்டோ வாகனப் புகை பரிசோதனை
சைக்கிள் பயண தினம்
சைக்கிள் பேரணி
விவாதங்கள்
இலவச PUC பரிசோதனை
எரிபொருள் சிக்கன பயன்பாட்டில் வண்டி ஓட்டுதல்
குழு உரையாடல்கள்
சிக்கன விளம்பரம் தாங்கிய விளம்பர ஹோர்டிங் / டிஜிட்டல் காட்சி
சைக்கிள் பேரணி
பம்பு ஊழியர்களுக்கு மாபெரும் பயிற்சி முகாம்
மாசு பற்றிய பரிசோதனை
சிக்கன தகவல் குறித்து கட்டுரைகள் வெளியிடுதல்
பள்ளி /கல்லூரி மாணவர்கள் இடையே விநாடி வினா, ஓவியம் தீட்டுதல்,
கட்டுரை, ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் விவாதம் ஆகிய போட்டிகளை நடத்துதல்
நெருப்பு இல்லாமல் சமையல் செய்யும் போட்டி
தொழில்துறையினர் இடையே தொழில்நுட்பம் சார்ந்த சந்திப்பு
LPG டெலிவரி ஊழியர்களுக்கு பயிற்சி
பொறியியல் மாணவர்களுக்கான பயிலரங்கம் ஆகியவை
இந்த போட்டிகள் வாயிலாக, மாணவ மாணவிகள், தங்கள் வீடுகளிலும் தொழில் துறை, போக்குவரத்து, விவசாயம் ஆகியவற்றிலும் பெட்ரோலியம் மற்றும் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்த தகவல்களை நேரடியாக அறிந்து கொள்வார்கள். அவற்றை அவர்கள், தங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துவார்கள்.
தமிழ்நாட்டில், மாணவர்கள் இடையே எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வும் பழக்கமும் ஏற்படுவதற்காக, PCRA மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்களில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்), திரு.வி.வெற்றி செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


****
(रिलीज़ आईडी: 1815681)
आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English