மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சர்வதேச நிறுவனங்களின் ஆர்வத்தை இந்திய செமிகண்டக்டர் உற்பத்தி ஈர்த்துள்ளது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் நிறுவங்களுடன் பேச்சுவார்த்தை: திரு அஷ்வினி வைஷ்ணவ்
Posted On:
05 APR 2022 1:27PM by PIB Chennai
செமிகான் இந்தியா திட்டத்திற்கு (இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்திச் சூழலை மேம்படுத்துவதற்கானத் திட்டம்) 760 பில்லியன் ரூபாய் செலவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை ஊக்குவிப்பதற்கான இத்திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், உலகளாவிய நிறுவனங்களின் ஆர்வத்தை இது ஈர்த்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று மாலை நடைபெற்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடம் உரையாற்றிய திரு வைஷ்ணவ் மேற்கண்டவாறு கூறினார்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறையின் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின்ஹ் சவுகான் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருமதி பிரனீத் கவுர், திரு ராதா மோகன் சிங், மற்றும் திரு கே.ஆர். சுரேஷ் ரெட்டி உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். செமிகண்டக்டர் கொள்கை மற்றும் சூழலியல் என்பது கூட்டத்தின் கருப்பொருளாகும்.
குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநில அரசுகள் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் / ஃபேப் வளாகங்களை அமைக்க நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரு அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்பாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் துறைகளின் வளர்ச்சியின் சாத்தியக்கூறுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. மின்னணு உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்கவும், நாட்டில் உள்ள செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே சூழலியல் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு ஆதரவளிக்கவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813581
*******
(Release ID: 1813805)
Visitor Counter : 298