உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
பிரம்மாண்டமான உணவுப் பூங்காக்களை உருவாக்குதல்
प्रविष्टि तिथि:
05 APR 2022 3:19PM by PIB Chennai
உணவுப் பதப்படுத்துதல் துறையில் நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும் வகையிலான பிரதம மந்திரி கிசான் சம்பதா திட்டத்தின் கீழ், பிரம்மாண்டமான உணவுப் பூங்காக்களை மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்த உணவுப் பூங்காக்களை அமைச்சகம் தானாக அமைப்பதில்லை. தேவைப்படும் இடங்களில் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் இவை செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 41 மெகா உணவுப் பூங்கா திட்டங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 22 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் திருநெல்வேலியில் கடந்த 2021 ஜூன் 23 முதல் செயல்பட்டுவருகிறது.
மக்களவையில் உணவுப்பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு.பிரகலாத் சிங் பட்டேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813637
***************
(रिलीज़ आईडी: 1813755)
आगंतुक पटल : 243