சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அகில இந்திய அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள்

Posted On: 02 APR 2022 4:07PM by PIB Chennai

அகில இந்திய அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள், தமிழ்நாடு அஞ்சலக வட்ட அளவில் 05.05.2022 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது

இதற்கான மனுக்கள் அஞ்சல் ( ) மின்னஞ்சல் மூலமாக முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 () bgt.tn@indiapost.gov.in வரும் 13.04.2022 மதியம் 15:00 மணிக்குள் பெறப்படும்.
அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பெறப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு காணொளி காட்சிக்கான இணைப்பு (meeting link) உரிய நபர்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது. என சென்னையிலுள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலக மூத்த கணக்கு அதிகாரி தெரிவித்துள்ளார்.

****


(Release ID: 1812761) Visitor Counter : 152
Read this release in: English