உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவுப் பதப்படுத்தல் தொழில் பூங்காக்கள்: தமிழ்நாடு குறித்த தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
01 APR 2022 4:00PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உணவுப்பதப்படுத்தல் இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
மத்திய உணவுப்பதப்படுத்தல் துறை முக்கியத் திட்டமான ‘பிரதமரின் கிசான் சம்படா யோஜனாவின்’ துணைத் திட்டங்கள் மூலமாக மெகா உணவுப் பூங்காக்கள் மற்றும் வேளாண் செயலாக்க குழுக்களை (மினி உணவு பூங்காக்கள்) அமைக்க உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் கடன் சார்ந்த நிதி உதவி மூலம் ஊக்குவிக்கிறது.
பிரதமரின் கிசான் சம்படா யோஜனாவின் கீழ் நாடு முழுவதும் 41 மெகா உணவுப் பூங்காக்களின் கீழ் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, 22 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு/செயல்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமரின் கிசான் சம்படா யோஜனாவின் கீழ் நாடு முழுவதும் வேளாண் பதப்படுத்தல் குழுக்களின் கீழ் 68 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, 12 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு/செயல்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமரின் கிசான் சம்படா யோஜனாவின் கீழ் தமிழகத்தில் மெகா உணவுப் பூங்காக்களின் கீழ் 1 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கிசான் சம்படா யோஜனாவின் கீழ் தமிழ்நாட்டில் வேளாண் பதப்படுத்தல் குழுக்களின் கீழ் 11 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812332
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1812522)
வருகையாளர் எண்ணிக்கை : 198