மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல்
Posted On:
30 MAR 2022 3:28PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, கல்வி அமைச்சகம், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு, மாநில/யூனியன் பிரதேச அரசுகள், கல்வி தொடர்புடைய அமைச்சகங்கள், மாநில கல்வித் துறைகள், வாரியங்கள், தேசிய தேர்வு முகமை, பள்ளி மற்றும் உயர்கல்வியின் ஒழுங்குமுறை அமைப்புகள், என்சிஈஆர்டி, எஸ்சிஈஆர்டி-கள், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் கொள்கையை செயல்படுத்த வேண்டும்.
முக்கியமான கருப்பொருள்கள்/துணைப் பிரிவுகளுக்கான வெவ்வேறு காலக்கெடுவை கொள்கை வழங்குகிறது. அத்துடன் அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வழங்குகிறது. அதன்படி, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ முழு மூச்சில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் இலக்குகள் மற்றும் நோக்கங்களைப் பின்பற்றி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு இந்தப் பணியில் உதவுவதற்காக, கொள்கை அமலாக்கத் திட்டத்தை பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை உருவாக்கியுள்ளது.
'தரமான கல்வி மூலம் ஆசிரியர்களின் முழுமையான முன்னேற்றம்' என்று அழைக்கப்படும் சர்த்தாக்கின் முக்கிய கவனம், இலக்குகள், முடிவுகள் மற்றும் காலக்கெடுவை தெளிவாக வரையறுக்கும் விதத்தில் செயல்பாடுகளை வரையறுப்பதாகும்.
கீழ்காணும் இணைப்புகளில் அதை காணலாம்:
https://dsel.education.gov.in/sites/default/files/SARTHAQ_Part-1_updated.pdf
https://dsel.education.gov.in/sites/default/files/SARTHAQ_Part-2_updated.pdf
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811447
*************
(Release ID: 1811645)