நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2015 செப்டம்பர் முதல் சண்டிகர், புதுச்சேரி உள்ளிட்ட மூன்று யூனியன் பிரதேசங்களில் அமலாக்கப்பட்டுள்ள பொது விநியோக முறைக்கான உணவு மானியத் தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக மாற்றப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
30 MAR 2022 4:07PM by PIB Chennai
2015 செப்டம்பர் முதல் சண்டிகர், புதுச்சேரி உள்ளிட்ட மூன்று யூனியன் பிரதேசங்களில் அமலாக்கப்பட்டுள்ள பொது விநியோக முறைக்கான உணவு மானியத் தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக மாற்றப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் 2016 மார்ச் மாதத்திலிருந்து தாத்ரா நாகர் ஹவேலியின் நகர்ப்பகுதிகளுக்கும் மானியத் தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த யூனியன் பிரதேசங்களின் பயனாளிகள் வெளிச்சந்தையில் அவர்கள் விரும்பும் உணவு தானியங்களை வாங்கிக் கொள்வதற்காக ரொக்கத் தொகை வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811483
****
(रिलीज़ आईडी: 1811594)
आगंतुक पटल : 251