விண்வெளித்துறை
இந்த ஆண்டில் இஸ்ரோ 7 செயற்கைக் கோள்களை செலுத்தக் கூடும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
30 MAR 2022 5:16PM by PIB Chennai
இந்த ஆண்டில் இஸ்ரோ 7 செயற்கைக் கோள்களை செலுத்தக் கூடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அமைச்சர், பிஎஸ்எல்வி –சி-52 செலுத்து வாகனம் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-4-ஐ 2022 பிப்ரவரி 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகக் கூறினார்.
விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் செயல்படுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை நானோ செயற்கைக் கோள்களில் முதலாவதான ஐஎன்எஸ் – 2டிடி-யும் இதனுடன் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811542
****
(Release ID: 1811570)
Visitor Counter : 220