ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சுய உதவி குழுக்களை வலுப்படுத்தல்: நடப்பு நிதியாண்டில் 5.43 லட்சம் குழுக்கள் உருவாக்கம்
Posted On:
29 MAR 2022 4:27PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
கிராமப்புற ஏழைப் பெண்களை சுய உதவி குழுக்களாக திரட்டுவது குறித்த வருடாந்திர செயல்திட்டங்களை தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அமைச்சகம் பெறுகிறது.
அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழு வருடாந்திர செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. சுய உதவி குழுக்களுக்குள் ஒவ்வொரு கிராமப்புற ஏழை குடும்பத்தில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணையாவது (சுமார் 9-10 கோடி) கொண்டுவருவது திட்டத்தின் நோக்கமாகும்.
நடப்பு நிதியாண்டில் 2022 பிப்ரவரி 28 வரை 5.43 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த வருடத்திற்கான இலக்கு 7.80 லட்சம் குழுக்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும், தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 74.80 லட்சம் சுய உதவி குழுக்கள் (தில்லி மற்றும் சண்டிகர் தவிர) உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், வங்கிகளிடமிருந்து கடன் பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டிக் கழிவு ஏற்கனவே வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக 2022-2 3-ம் வருடத்திலிருந்து வருடத்திற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூபாய் 3 லட்சம் வரை கடன் பெற மகளிர் சுய உதவி குழுக்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810970 ****************************
(Release ID: 1811139)
Visitor Counter : 170