சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பட்டியல் பிரிவினர்/மூத்த குடிமக்கள்/மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள்
Posted On:
29 MAR 2022 4:40PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ஏ நாராயணசாமி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
பட்டியல் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர், மூத்த குடிமக்கள், மதுவினால் மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டோர், திருநர்கள், யாசகம் கேட்போர், நாடோடி பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தால் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வதில் இத்துறை கவனம் செலுத்துகிறது.
வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதற்காக திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் அமைச்சகம், நிதிகள் முறையாக பயன்படுத்தப்படுவதை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்கிறது. அவற்றில் சில பின்வருமாறு:
* நிதிகளைக் கோரும் தன்னார்வ அமைப்புகளின் விண்ணப்பங்கள் இ-அனுதான் தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே பெறப்படுகின்றன.
* மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பரிந்துரைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே தன்னார்வ அமைப்புகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
* பட்டய கணக்காளர்களால் சரிபார்க்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை பெறப்பட்ட பிறகே செயல்படுத்தும் முகமைகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.
* அதிகாரிகள், அமைச்சகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளால் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆய்வறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
* தன்னார்வ அமைப்புகள் சிசிடிவி பொருத்தி அதன் நேரடி ஒளிபரப்பை இணையதளத்தில் வழங்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810987
*******************************
(Release ID: 1811135)