விவசாயத்துறை அமைச்சகம்
மண் அரிப்பு குறித்த ஆய்வு: தமிழ்நாட்டில் பாதிப்படைந்துள்ள நிலத்தின் அளவு
Posted On:
29 MAR 2022 2:53PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
மண் அரிப்பு மற்றும் நிலச் சீரழிவின் அளவு மற்றும் தன்மையை நாடு முழுவதும் கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவியல் ஆய்வு நடத்தப்படுவதில்லை என்ற போதிலும், வெவ்வேறு முகமைகள்/நிறுவனங்களால் அவ்வப்போது வெவ்வேறு வழிமுறைகள்/அளவுகோல்களைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்படுகிறது.
தேசிய வேளாண் அறிவியல் அகாடமியின் (2010 படி, நாட்டின் சாகுபடி நிலத்தில் மண் அரிப்பின் அளவு (10 டன்னுக்கு மேல் மண் இழப்பு/ஹெக்டர்/வருடத்திற்கு) 92.4 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.
ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனாவின் துணைத் திட்டமான சிக்கலுடைய மண்ணை மீட்டெடுப்பதற்கான திட்டத்தின் கீழ் காரத்தன்மை, உப்புத்தன்மை மற்றும் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்கான உதவிகளை அரசு வழங்குகிறது. 2016-17 முதல் 2020-21 வரை ரூ. 58.76 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு 0.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மண் அரிப்பால் 9240000 ஹெக்டேர் நிலம் பாதிப்படைள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2308 ஹெக்டேர் நிலம் மண் அரிப்பால் பாதிப்படைள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810912
*************************
(Release ID: 1811129)