சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஸ்சி பிரிவினருக்கு எதிரான நடவடிக்கைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்

प्रविष्टि तिथि: 29 MAR 2022 4:37PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அதாவாலே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைப்படி எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் அமல்படுத்தப்படுகின்றன.

இந்த சட்டவிதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி மாநிலம், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு எதிரான நடவடிக்கைகள் மீது 1,296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810983

                           ***************************

 


(रिलीज़ आईडी: 1811111) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English