விவசாயத்துறை அமைச்சகம்

செலவில்லா இயற்கை விவசாயத்திற்கு மாறுதல்: தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி விவரம்

Posted On: 29 MAR 2022 2:55PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

வேளாண் உள்ளீட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கும்இயற்கை விவசாயம் உள்ளிட்ட பாரம்பரிய உள்நாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் (பிகேவிஒய்) துணைத் திட்டமாக, 2020-21-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய பிரகிருதிக் கிரிஷி பததியை (பிபிகேபி) அரசு செயல்படுத்தி வருகிறது.

அனைத்து செயற்கை ரசாயன உள்ளீடுகளையும் விலக்குவதை இத்திட்டம் முக்கியமாக வலியுறுத்துவதோடு பயோமாஸ் தழைக்கூளம்மாட்டு சாணம்-சிறுநீர் கலவைகள் மற்றும் தாவர அடிப்படையிலான தயாரிப்புகளின் பயன்பாடு ஆகியவற்றோடு பண்ணையில் உயிரி மறுசுழற்சியை ஊக்குவிக்கிறது.

திறன் வளர்ப்பு மூலம் பயிற்சி என்பது திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ்பயிற்சி பெற்ற பணியாளர்கள்சான்றிதழ் மற்றும் குழுக்கள் உருவாக்கம்திறன் மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்காக 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி உதவி வழங்கப்படுகிறது.

4.09 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்யப்பட்டுஆந்திரப் பிரதேசம்சத்தீஸ்கர்கேரளாஇமாச்சலப் பிரதேசம்ஜார்க்கண்ட்ஒடிசாமத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ 4980.99 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2000 ஹெக்டேருக்கு ரூ 31.82 லட்சம் வழங்கப்பட்டு, 70 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்நிலங்களில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810917



(Release ID: 1811048) Visitor Counter : 116


Read this release in: English