விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறையில் நேரடி பணப் பரிமாற்றம்

Posted On: 29 MAR 2022 2:47PM by PIB Chennai

பிரதமரின் விவசாயிகள் ஆதரவு திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமாகும். நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்தினருக்கு நிதியுதவி  அளிப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  வேளாண் மற்றும் அதுசார்ந்த பணிகளுக்கான செலவுகளை எதிர்கொள்ள இத்தொகை அளிக்கப்படுகிறது.  அதன்படி ஆண்டுதோறும் 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய்  நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது.  மேற்கு வங்க மாநிலம் கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்டத்தில் சேர்ந்தது.

மேற்கு வங்கத்தில் வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் 209 திட்டங்களுக்கு 109 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  டார்ஜிலிங் மாவட்டத்தில் 3 திட்டங்கள் 98 லட்ச ரூபாயிலும், கலிம்போங் மாவட்டத்தில் 2 திட்டங்கள் 51 லட்சம் ரூபாயிலும் நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இது குறித்த கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த போது மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

***************


(Release ID: 1810940) Visitor Counter : 240
Read this release in: English